விதரண மாவலி - திருவோணம் பண்டிகை சிறப்புப் பதிவு
26.08.2026, புதன் கிழமை
முருகா சரணம்
இன்று ஓணம் பண்டிகை. அண்டம் முழுவதும் தனது ஆட்சியை நடத்தி வந்தார் மகாபலி சக்கரவர்த்தி. தேவர்களைக் காக்க வேண்டி, மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமனராய் வந்தார் திருமால். திரிரவிக்கிரம வடிவு கொண்டு, இரண்டடியால் மூவுலகையும் அளந்தார் திருமால். மூன்றாம் அடியை எங்கு வைப்பது எனக் கேட்ட திருமாலிடம், தன்னையே அர்ப்பணித்தார் மகாபலி. மகாபலியின் சிரம் மீது மூன்றாவது அடியை வைத்து, அவரைப் பாதாள உலகிற்கு அனுப்பினார் திருமால். எனினும் தன் மக்களை ஆண்டுக்கு ஒரு தான் காண வேண்டும் என்று திருமாலிடம் வேண்டிய மகாபலிக்கு, அந்த வரத்தை அளித்தருளினார். அந்நாளே ஓணம் என்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
மகாபலி, வாமனர் பற்றிய குறிப்புகளை, அருணகிரிநாதர் பல திருப்புகழ்ப் பாக்களில் பாடியுள்ளார். நமது இசை வழிபாடு புத்தகத்தில் காணப்படும் குறிப்புகளை இங்கு காணலாம்.
பாடல் 68 - கருவினுருவாகி:
உலகளவு மால்
பாடல் 122 - எலுப்பு நாடிகள்:
மாபலியைச் சிறை வைத்தவன்
பாடல் 234 - சருவியிகழ்ந்து:
அலங்கல் புனைந்தருளும் குறள் வடிவன்
பாடல் 315 - வதன சரோருக:
ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள, விதரண மாவலி வெருவ, மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன்
பாடல் 325 - அதல சேடனார்:
உததி மீதிலே சாயும் உலக மூடு சீர்பாத உவணம் ஊர்தி மா மாயன்
பாடல் 327 - அமலவாயு:
உலகேழும் விரிவு காணு மா மாயன்
பாடல் 384 - நாராலே:
பார் ஏழ் ஓர் தாளாலே ஆள்வோர்
பாடல் 410 - மனகபாட:
அநக வாமனாகார முநிவராக மால்
பாடல் 412 - மாண்டார்:
ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர்
பாடல் 431 - செறிதரும்:
குறியவன்
பாடல் 458 - குமரி காளி:
குறளுரூப முராரி
சீர்பாத வகுப்பு:
வடிவு குறளாகி மாபலியை வலிய சிறையிட வெளியின் முகடு கிழிபட முடிய வளரு முகில்
கந்தர் அலங்காரம் 15:
படி மாவலிபால் மூவடி கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான்
கந்தர் அந்தாதி 21:
செகம் அளப்ப சிந்தாகு உலவு அரி
கந்தர் அந்தாதி 57:
தீத்தன் பரவு ஐ வெளி நீங்கி சேய் தொழ செல் பத உத்தீத்தன்

.jpg)
Comments
Post a Comment