அருணகிரி பரவு ஹரி - பகுதி 42


பாடல் 415 - மூலா நிலமதின்

அரிகரி நாராயணர் திரு மருகோனே

பாடல் 416 - மோதுமறலி

சூது பொரு தருமன் நாடு தோற்று இரு
     ஆறு வருஷம் வனவாசம் ஏற்றியல்
          தோகையுடனுமெ விராட ராச்சியம் உறைநாளிற்

சூறை நிரைகொடு அவர் ஏக மீட்டு எதிர்
     ஆளும் உரிமை தருமாறு கேட்டு ஒரு
          தூது செல அடு வலாண்மை தாக்குவன் என மீள

வாது சமர் திருதரானராட்டிர
     ராஜகுமரர் துரியோதனாற் பிறர்
          நிருபரொடு சேனை தூட்பட வரிசாப

வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய
     தேரை முடுகு நெடுமால் பராக்ரம
          மாயன் மருக

பாடல் 420 - வேடர் செழுந்தினை

ஆடக மந்தர நீர்க்கு அசையாமல் உரம்பெற நாட்டி ஒர்
     ஆயிர வெம் பகுவாய்ப்பணி  கயிறாக

ஆழி கடைந்து அமுதாக்கி அநேகர்பெரும் பசி தீர்த்தருள் ஆயனும்

பொருளுரை ஒலி வடிவம்:


Comments