அருணகிரி பரவு ஹரி - பகுதி 40
பாடல் 396 (பருதியாய்)
திருதராட்டிரன் உதவு நூற்றுவர்
சேண் நாடாள்வான் நாள் ஓர் மூவாறினில்வீழத்
திலக பார்த்தனும் உலகு காத்தருள்
சீராமாறே தேரூர் கோமான் மருகோனே
பாடல் 403 (பெருங்காரியம்)
இருங்கானகம் போய் இளங்காளை பின்போக
எங்கே மடந்தை எனவேகி
எழுந்தே குரங்கால் இலங்காபுரம் தீ
இடும் காவலன் தன் மருகோனே
பாடல் 412 (மாண்டார்)
ஆண்டார் தலங்கள் அளந்திட
நீண்டார் முகுந்தர் தடந்தனில்
ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலைவாயுற்று
ஆங்கோர் சிலம்பு புலம்பிட
ஞான்றூது துங்க சலஞ்சலம்
ஆம்பூ முழங்கி அடங்கும் அளவில் நேசம்
பூண்டு ஆழி கொண்டு வனங்களில்
ஏய்ந்து ஆள வென்று வெறுந்தனி
போந்து ஓலம் என்று உதவும்புயல் மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment