அருணகிரி பரவு ஹரி - 39
பாடல் 393 - பகிர நினைவொரு
மகர சலநிதி முறையிட நிசிசரன்
மகுடம் ஒருபதும் இருபது திரள்புய
வரையும் அறவொரு கணைதெரி புயல் குரு ந்ருபதூதன்
மடுவில் மதகரி முதலென உதவிய
வரதன் இருதிறல் மருதொடு பொருதவன்
மதலை குதலையின் மறைமொழி இகழ் இரணியன் ஆகம்
உகிரின் நுதிகொடு வகிரும் ஒர் அடல் அரி
திகிரிதர மரகத கிரி எரியுமிழ்
உரக சுடிகையில் நடநவில் அரி திரு மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment