அருணகிரி பரவு ஹரி - பகுதி 37


பாடல் 369 - சுருதி வெகுமுக

மருது நெறுநெறென மோதி வேரோடு

     கருதும் அலகை முலை கோதி வீதியில்

          மதுகையொடு தறுகண்‌ ஆனை வீரிட வென்று தாளால்

வலிய சகடு இடறி மாயமாய் மடி

     படிய நடைபழகி ஆயர்பாடியில்

          வளரு முகில் மருக 

பாடல் 370 - சூதினுணவாசை

நாத ரகுராம அரி மாயன் மருகா

பாடல் 371 - செழுந்தாது 

கொழுங் கானிலே மாதர் செழுஞ்சேலையே கோடு

     குருந்தேறு மால்மாயன் மருகோனே

பாடல் 372 - ஞானாவிபூஷணி 

பேராண்மையாளன் நிசாசரர் கோன் இரு

     கூறாக வாளி தொடூ ரகுநாயகன்

          பூவாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே

பாடல் 374 - தத்தனமும் 

பத்து முடி உருளுவித்த பகழியினர்

     பச்சை நிறமுகிலின் மருகோனே

பாடல் 375 - தரணிமிசை 

சகமுழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும்

பாடல் 378 - திரிபுரம் அதனை

அரவணை துயிலும் அரி திரு மருக

பாடல் 384 - நாராலே 

பார் ஏழ் ஓர் தாளாலே ஆள்வார்

பாடல் 387 - நித்தமுற்று 

வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாள 

  விட்ட நத்துகரனுக்கு மருகோனே

பொருளுரை ஒலி வடிவம் 




Comments