அருணகிரி பரவு ஹரி - பகுதி 32



பாடல் 265 - ஊனாரும்

மா நாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோன்

பாடல் 269 - குசமாகி 

நிஜ நாரணாதி திரு மருகா 

ஆழி அரி (சக்கரம் ஏந்திய ஹரி)

பாடல் 276 - சதுரத்தரை

விதுரற்கும்  அராக்கொடியானையும்
     விகடத்து உறவாக்கிய மாதவன்
          விசையற்கு உயர் தேர்ப்பரி ஊர்பவன் மருகோனே

பாடல் 285 - ஓலமிட்டு 

ஞாலவட்ட முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற 
நாரணற்கருள் சுரந்த மருகோனே

பாடல் 289 - உரையும் சென்றது

அரிமைந்தன் புகழ் மாருதி என்றுள
     கவியின் சங்கம் இராகவ புங்கவன்
          அறிவும் கண்டருள்வாய் என அன்பொடு தரவேறுன்

அருளும் கண்ட தராபதி வன்புறு
     விஜயம் கொண்டெழு போது புலம்பிய
          அகமும் பைந்தொடி சீதை மறைந்திட வழிதோறும்

மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள்
     கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி
          மணியின் பந்தெறிவாய் இது பந்தென  முதலான

மலையும் சங்கிலி போல மருங்கு விண்
     முழுதும் கண்ட நராயணன் அன்புறு
          மருகன்

பொருளுரை ஒலி வடிவம்:

Comments