அருணகிரி பரவு ஹரி - பகுதி 30


பாடல் 243 - அலங்கார முடிக்கிரண

இலங்கேசர் வனத்துள் வனக்குரங்கு ஏவி அழற்புகையிட்டு
     இளந்தாது மலர்த்திருவைச் சிறைமீளும்

இளங்காள முகில் கடுமைச் சரங்கோடு கரத்தில் எடுத்து
     இருங்கான நடக்கும் அவற்கு இனியோனே

பாடல் 246 - பச்சையொண்கிரி

நச்சு வெண்பட மீதணைவார் முகில்
     பச்சை வண்புயனார் கருடாசனர்
          நற்கரம் தநு கோல் வளை நேமியர் மருகோனே

பாடல் 249 - இருவினை அஞ்ச

மருதொடு கஞ்சன் உயிர்பலி கொண்டு
     மகிழ் அரி விண்டு மருகோனே


பொருளுரை ஒலி வடிவம்:


Comments

Post a Comment