அருணகிரி பரவு ஹரி - பகுதி 25




பாடல் 229 - மனமெனும்

கனக னங்கையி னாலறை தூணிடை
     மனித சிங்கம தாய்வரை பார்திசை
          கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் முனையாலே

கதற வென்றுடல் கீணவ னாருயி
     ருதிர முஞ்சித றாதமு தாயுணு
          கமல வுந்திய னாகிய மால்திரு மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

கனகன் அங்கையினால் அறை தூணிடை
     மனித சிங்கமதாய் வரை பார் திசை
          கடல் கலங்கிடவே பொருதே உகிர் முனையாலே

கதற வென்று உடல் கீண் அவன் ஆருயிர்
     உதிரமும் சிதறாது அமுதாய் உணு
          கமல உந்தியனாகிய மால் திரு மருகோனே


பொருளுரை ஒலி வடிவம்:


Comments