அருணகிரி பரவு ஹரி - பகுதி 18

உடுக்கத் துகில் (பாடல் 150)


குடக்குச் சிலதூதர் தேடுக
     வடக்குச் சிலதூதர் நாடுக
          குணக்குச் சிலதூதர் தேடுக  வெனமேவிக்

குறிப்பிற் குறிகாணு மாருதி
     யினித்தெற் கொருதூது போவது
          குறிப்பிற் குறிபோன போதிலும்  வரலாமோ

அடிக்குத் திரகார ராகிய
     அரக்கர்க் கிளையாத தீரனு
          மலைக்கப் புறமேவி மாதுறு  வனமேசென்

றருட்பொற் றிருவாழி மோதிர
     மளித்துற் றவர்மேல் மனோகர
          மளித்துக் கதிர்காம மேவிய  பெருமாளே

பதம் பிரித்த வடிவம்:

குடக்குச் சிலதூதர் தேடுக
     வடக்குச் சிலதூதர் நாடுக
          குணக்குச் சிலதூதர் தேடுக எனமேவிக்

குறிப்பில் குறிகாணும் மாருதி
     இனித் தெற்கு ஒரு தூது போவது
          குறிப்பில் குறிபோன போதிலும் வரலாமோ

அடிக் குத்திரகாரராகிய
     அரக்கர்க்கு இளையாத தீரனும்
          அலைக்கு அப் புறமேவி மாது உறு வனமே சென்று

அருள் பொன் திருவாழி மோதிரம்
     அளித்துற்று அவர்மேல் மனோகரம்
          அளித்துக் கதிர்காம மேவிய பெருமாளே

பொருளுரை ஒலி வடிவம்:


Comments