அருணகிரி பரவு ஹரி - பகுதி 17




பாடல் 133 - தாக்கமருக்கொரு 

மூக்கறை மட்டைம காபல காரணி
     சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
          மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி முழுமோடி

மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
     பேற்றிவி டக்கம லாலய சீதையை
          மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை
     வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
          மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

மூக்கறை மட்டை மகாபல காரணி
     சூர்ப்பநகைப் படு மூளி‌ உதாசனி
          மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி  முழுமோடி

மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு
     ஏற்றிவிடக் கமலாலய சீதையை
          மோட்டன் வளைத்து ஒரு தேர்மிசையே கொடு  முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை
     வீட்டில் இருத்தி அந்நாள் அவன் வேர் அற
          மார்க்கமுடித்த விலாளிகள் நாயகன்  மருகோனே

பொருளுரை ஒலி வடிவம்:

Comments