அருணகிரி பரவு ஹரி - பகுதி 9
வஞ்சம் கொண்டும் - பாடல் 50
வஞ்சங்கொண் டுந்திட ராவண
னும்பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின்பண் புஞ்சரி யாமென வெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாகஎ
திர்ந்துந்தன் சம்பிர தாயமும்
வம்புந்தும் பும்பல பேசியு மெதிரேகை
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ
குண்டுங்குன் றுங்கர டார்மர மதும்வீசி
மிண்டுந்துங் கங்களி னாலெத
கர்ந்தங்கங் கங்கர மார்பொடு
மின்சந்துஞ் சிந்தநி சாசரர் வகைசேர
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
ளுந்துந்துந் தென்றிட வேதசை நிணமூளை
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
டிண்டிண்டென் றுங்குதி போடவு
யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
வஞ்சம் கொண்டும் திட ராவணனும்
பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின் பண்பும் சரியாமென வெகுசேனை
வந்து அம்பும் பொங்கியதாக
எதிர்ந்தும் தன் சம்பிரதாயமும்
வம்பும் தும்பும் பல பேசியும் எதிரே
கைமிஞ்சென்றும் சண்டை செய் போது
குரங்கும் துஞ்சும் கனல் போல
வெகுண்டும் குன்றும் கரடார் மரம் அதும்வீசி
மிண்டும் துங்கங்களினாலெ
தகர்ந்து அங்கம் கம் கர மார்பொடு
மின்சந்தும் சிந்த நிசாசரர் வகைசேரவும்
சண்டன் தென் திசை நாடி
விழுந்து அங்கும் சென்று எம தூதர்கள்
உந்து உந்து உந்து என்றிடவே தசை நிணமூளை
உண்டும் கண்டும் சில கூளிகள்
டிண்டிண்டென்றும் குதி போட
உயர்ந்தம்பும் கொண்டு வெல் மாதவன் மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment