அருணகிரி பரவு ஹரி - பகுதி 8
பாடல் 42 - புகரப் புங்க
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் திருமாலும்
திகிரிச் செங்கைத் திருமாலும்
பதம் பிரித்த வடிவம்
திகிரிச் செங்கட்செவியில் துஞ்சத்
திகிரிச் செங்கைத் திருமாலும்
திகிரிச் செங்கைத் திருமாலும்
பாடல் 43 - பூரண வார
வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு
வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த
மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் மருகோனே
வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த
மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
வாரண மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு
வாவியின் மாடு இடங்கர் பாழ்படவே எறிந்த
மாமுகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் மருகோனே
பாடல் 45 - மனத்தின் பங்கு
கனைக்குந்தண் கடற்சங்கங்
கரத்தின்கண் தரித்தெங்குங்
கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் சிடுமாலும்
கரத்தின்கண் தரித்தெங்குங்
கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் சிடுமாலும்
பதம் பிரித்த வடிவம்:
கனைக்கும் தண் கடல் சங்கம்
கரத்தின்கண் தரித்து எங்கும்
கலக்கம் சிந்திடக் கண் துஞ்சிடு மாலும்
பாடல் 47 - முனைச்சங்கோலிடு (அனிச்சம் கார்முகம்)
முனைச்சங் கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்
முனைச்சங்கு ஓலிடு நீல மகோததி
அடைத்த அஞ்சாத இராவணன் நீள் பல
முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே
பாடல் 49 - மூளும் வினை
வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு
சோதிமணி மார்ப மால்
பதம் பிரித்த வடிவம்:
வாள முழுதாளும் ஓர் தண் துழாய் தங்கு
சோதி மணி மார்ப மால்
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment