அருணகிரி பரவு ஹரி - பகுதி 11



பாடல் 70 (குருதி மலஜலம்)

படிவ முகிலென அரி

பாடல் 71 (சிவனார்)

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே

பதம் பிரித்த வடிவம் 

நவநீதமும் திருடி உரலோடெ ஒன்றும் அரி
ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே

பாடல் 72 (சீயுதிரம்)

மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
     பார்முழுது மண்ட கோளமுந டுங்க
          வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கை  யதனாலே

வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
     நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
          வாரண இரண்டு கோடொடிய வென்ற நெடியோனாம்

வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
     மேயல்புரி செங்கண் மால்மருக

பதம் பிரித்த வடிவம் 

மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு
     பார்முழுதும் அண்ட கோளமும் நடுங்க
          வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கை அதனாலே

வாரியுற அண்டி வீறொடு முழங்கு
     நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த
          வாரண இரண்டு கோடு‌ ஒடிய வென்ற நெடியோனாம்

வேயின் இசை கொண்டு கோநிரை புரந்து
     மேயல்புரி செங்கண் மால் மருக

பொருளுரை ஒலி வடிவம்:


Comments