அருணகிரி பரவு ஹரி - பகுதி 10
பாடல் - 53 (வரியார் கருங்கண்)
அரிகேச வன்றன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
அரி கேசவன் தன் மருகோனே
பாடல் - 61 (உலக பசு பாச)
முகுந்தன் மருகோனே
பாடல் - 63 (ஒருவரை ஒருவர் தேறி)
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருளு நாத னருள்பாலா
பதம் பிரித்த வடிவம்:
திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத
திருநடம் அருளு நாதன் அருள் பாலா
பாடல் 65 (கதியை விலக்கு)
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமு கசுத்த வீரிய ...... குணமான
இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற
இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
இரவி குலத்து இராசத மருவி எதிர்த்து வீழ் கடு
ரண முக சுத்த வீரிய குணமான
இளையவனுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற
இதமொடளித்த ராகவன் மருகோனே
பாடல் 66 (கரிய பெரிய)
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை யெறிவோனே
பதம் பிரித்த வடிவம்:
அரியும் அயனும் வெருவ உருவ
அரிய கிரியை எறிவோனே
பாடல் 68 (கருவினுருவாகி)
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
உரகபட மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர்
உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment