அருணகிரி பரவு ஹரி - பகுதி 4
பாடல் 18 (உருக்கம் பேசிய):
திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
துதிக்குந் தாளுடை நாயக னாகிய
செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர்
துதிக்கும் தாளுடை நாயகன் ஆகிய
செகச்செஞ்சோதியும் ஆகிய மாதவன் மருகோனே
பாடல் 19 (உததியறல்):
எறிதிரைய லம்பு பாலுததி நஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனும்
பதம் பிரித்த வடிவம்:
எறிதிரை அலம்பு பால் உததி நஞ்அ அரா மேல்
இருவிழி துயின்ற நாரணனும்
பாடல் 25 (காலனார்):
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந் தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
ஆலகாலம் பரன் பாலது ஆக அஞ்சிடும்
தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும்
ஆரவாரம் செயும் வேலைமேல் கண்வளர்ந்த
ஆதி மாயன் தன் நன் மருகோனே
பாடல் 30 (தண்டையணி)
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்
பதம் பிரித்த வடிவம்:
புண்டரிகர் தந்தையும் சிந்தைகூரக்
கொண்ட நடனம்
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment