அருணகிரி பரவு ஹரி - பகுதி 3


பாடல் 8 (கனகந்திரள்):


பனகந்துயில் கின்றதி றம்புனை

     கடல்முன்புக டைந்தப ரம்பரர்

          படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே


பதம் பிரித்த வடிவம்:


பனகம் துயில்கின்ற திறம்புனை

     கடல் முன்பு கடைந்த பரம்பரர்

          படரும் புயல் என்றவர் அன்புகொள் மருகோனே


பாடல் 10 (தடக்கை):


புரக்கக் கஞ்சைமன் ...... பணியாக


பதம் பிரித்த வடிவம்:


புரக்கக் கஞ்சை மன்  பணியாக


பாடல் 13 (அருணமணி):


மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி

     தனைமுழுதும் வாரி யேயமு

          துண்டிட் டண்டர்க் கருள்கூரும்


செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை

     தெளிவினுடன் மூல மேயென

          முந்தச் சிந்தித் தருள்மாயன்


திருமருக


பதம் பிரித்த வடிவம்:


மேக சாயலர் தமர மகராழி சூழ் புவி

     தனை முழுதும் வாரியே அமுது

          உண்டிட்டு அண்டர்க்க அருள்கூரும்


செருமுதலி மேவு மாவலி அதிமத கபோல மாமலை

     தெளிவினுடன் மூலமே என

          முந்தச் சிந்தித்து அருள் மாயன்


திருமருக


பொருளுரை ஒலி வடிவம்:

Comments