அருணகிரி பரவு ஹரி - பகுதி 2
கருவடைந்து - பாடல் 7
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
பதம் பிரித்த வடிவம்
இரவி இந்த்ரன் வெற்றிக் குரங்கின்
அரசர் என்றும், ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கு இனக் கர்த்தன் என்றும், ...... நெடுநீலன்
எரி அ(து) என்றும், ருத்ரன் சிறந்த
அநுமன் என்றும், ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து ...... புனம் மேவ
அரி அதன் படைக்கர்த்தர் என்று
அசுரர் தம் கிளைக்கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment