நவசித்தி அருள் சக்தி - பகுதி 16
யுவதி பவதி பகவதி மதுர
வசனி பயிரவி கவுரி உமையாள் த்ரிசூலதரி
வநசை மதுபதி அமலை விசயை திரிபுரை புநிதை
வநிதை அபிநவை அநகை அபிராம நாயகி
தேவேந்திர சங்க வகுப்பு
தரணியில் அரணிய முரண் இரணியனுடல் தனை நகநுதிகொடு
சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
தாமாங்குச மென் திரு தாளாந்தர அம்பிகை
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணிமுடி பொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி
இரண கிரண மடமயில் ம்ருகமத புளகித இளமுலை இள
நீர்தாங்கி நுடங்கிய நூல்போன்ற மருங்கினள்
இறுகிய சிறுபிறை எயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
யான் ஏங்குதல் கண்டெதிர் தானேன்று கொளும் குயில்
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் காண்போம்.
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment