நவசித்தி அருள் சக்தி - பகுதி 13
436 - புனமடந்தைக்கு
பனவி ஒன்றெட்டுச் சக்ரதலப் பெண்
கவுரி செம்பொற்பட்டு உத்தரியப்பெண்
பழய அண்டத்தைப் பெற்ற மடப்பெண் பணிவாரைப்
பவதரங்கத்தைத் தப்ப நிறுத்தும்
பவதி கம்பர்க்குப் புக்கவள்
438 - மக்கட்கு
கச்சுற்றப் பார பயோதர முலையாள் முன் கற்புத் தப்பாது உலகேழையும்
ஒக்கப் பெற்றாள் விளையாடிய கச்சி
440 - வம்பறா
கம்பராய்ப் பணி மன்னு புயம் பெறுகைக்குக் கற்புத் தவறாதே
கம்பை ஆற்றினில் அன்னை தவம் புரி கச்சி
442 - ஓலமறைகள்
ஞால முதல்வி இமயம் பயந்த மின்
நீலி கவுரி பரை மங்கை குண்டலி
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரிபுராயி
நாத வடிவி அகிலம் பரந்தவள்
ஆலின் உதரம் உள பைங்கரும்பு வெணாவலரசு மனை வஞ்சி
445 - பரிமள மிகவுள
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநகர் உறை பேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை உலகினை ஈன்ற தாய் உமை
கரிவனம் உறை அகிலாண்ட நாயகி
449 - இரவியும் மதியும்
அருமறையவர் அந்தரம் உறைபவர் அன்புடையவர் உய அன்று அறமேவும் அரிவை
452 - இருவினை அஞ்ச
எமை ஈண அரசி
454 - கடல்பரவு
இடம் உமை
விளக்கவுரை ஒலிவடிவம்:

.jpg)
Comments
Post a Comment