நவசித்தி அருள் சக்தி - பகுதி 12


428 - கனிதரும்

புனிதன் அம்பைக்குக் கைத்தல ரத்நம்

அனனியம் பெற்று அற்றற்றொரு பற்றும்
     தெளிதரும் சித்தர்க்குத் தெளிசில் கொந்து அமலை தென் கச்சிப் பிச்சி மலர்க் கொந்தள பாரை

அறவி நுண் பச்சைப் பொற்கொடி கற்கண்டு
     அமுதினும் தித்திக்கப்படு சொற்கொம்பு
          அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின் பொலமேருத்

தனிவடம் பொற்புப் பெற்ற முலைக்குன்று
     இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசுப்பின்
          தருணி சங்குற்றுத் தத்து திரைக் கம்பையினூடே

தவமுயன்று அப் பொற்றப் படி கைக்கொண்டு
     அறம் இரண்டு எட்டு எட்டு எட்டும் வளர்க்கும்
          தலைவி

430 - சீசி முப்புரக் காடு

சீர்படைத்த அழல் சூல மான் மழுப்
     பாணி வித்துருப் பாதன் ஓர் புறச்
          சீர் திகழ்ப் புகழ்ப் பாவை 

432 - தலைவலையத்து

குலசயிலத்துப் பிறந்த பெண்கொடி
     உலகடையப் பெற்ற உந்தி அந்தணி
          குறைவற முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை

குணதரி சக்ர ப்ரசண்ட சங்கரி
     கணபண ரத்நப் புயங்க கங்கணி
          குவடு குனித்துப் புரம் சுடும் சின வஞ்சி நீலி

கலப விசித்ரச் சிகண்டி சுந்தரி
     கடியவிஷத்தைப் பொதிந்த கந்தரி
          கருணை விழிக் கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி

கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை
     சுருதி துதிக்கப்படுந் த்ரியம்பகி
          கவுரி

பொருளுரை ஒலி வடிவம்:


Comments