நவசித்தி அருள் சக்தி - பகுதி 11
421 - வேத வித்தகா
புண்டரீக மீதிருக்கு நாமாதோடு சேயிதழ் மீதிருக்கும் ஏரார் மா புலோமசை வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடினம் நின்று நாளும்
"வேத வித்தகீ! வீமா! விராகிணி!
வீறு மிக்க மா வீணாகரே! மக மேரு உற்றுவாழ் சீரே! சிவாதரெ! அங்கராகீ!
ஆதி சத்தி! சாமாதேவி! பார்வதி!
நீலி! துத்தியார் நீள் நாக பூஷணி!
ஆயி! நித்தியே! கோடீர மாதவி!" என்று தாழும் ஆர்யை
422 - அதிமதம் கக்க
அபிராமி பதிவ்ரதம் பற்றப் பெற்ற மகப்பெண்
423 - அறிவிலாப் பித்தர்
இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப் பிரிந்து இடபமேல் கச்சி வந்த உமையாள் தன்
இருளை நீக்கத் தவம் செய்து அருள நோக்கிக் குழைந்த
427 - கறையிலங்கு
பிறை கரந்தைக் கொத்துப் பணி மத்தம்
தலை எலும்பு அப்புக் கொக்கிறகு அக்கம்
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திருக்கொன்றையும் வேணிப்
பிறவு நின்று ஒக்கத் தொக்கு மணக்கும்
சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
பெறு கரும்பு அத் தக்கத்து அருள் நற்பங்கய வாவி
திறை கொளும் சித்ரக் குத்து முலைக்கொம்பு
அறியும் அம் தத்தைக் கைக்கக மொய்க்கும்
த்ரிபுரை செம்பட்டுக் கட்டு நுசுப்பின் திருவான
தெரிவை அம் துர்க்கிச் சத்தி எவர்க்கும்
தெரிவரும் சுத்தப் பச்சை நிறப் பெண்
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment