நவசித்தி அருள் சக்தி - பகுதி 6


246 - பச்சை ஒண் கிரி

பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம்
     முற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில்
          பற்று புண்டரிகாமென ஏய் கயல் விழி ஞான

பத்தி வெண் தரளாமெனும் வாள் நகை
     வித்ருமம் சிலை போல் நுதல் ஆரிதழ்
          பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று

இச்சை அந்தரி பார்வதி மோகினி
     தத்தை பொன் கவின் ஆலிலை போல் வயிறு
          இல் பசுங்கிளியான மினூலிடை அபிராமி

எக் குலம் குடிலோடு உலகியாவையும்
     இற்பதிந்து‌ இரு நாழி நெலால் அறம்
          எப்பொதும் பகிர்வாள்

32 அறம்

1. ஆ உரிஞ்சு தறி அமைத்தல் 
2. பசுவிற்கு வாயுறை 
3. துறந்தோர்க்கு உணவிடுதல்
4. மகவளர்த்தல்
5. வேதம் முதலியன ஓதுவித்தல் 
6. மகப்பால் கொடுத்தல்
7. அறுவகை சமயத்தார்க்கும் உண்டி கொடுத்தல்
8. கருவாய்த்த மகளிரைக் காத்தல்
9. ஒப்புரவு செய்தல்
10. மருந்து கொடுத்தல்
11. சோலை அமைத்தல்
12. நீர் நிலை அமைத்தல்
13. விலங்கிற்கு உணவு இடுதல்
14. அறவுரை கேட்பித்தல்
15. தீக்ஷை கொடுத்தல் 
16. அறவோர் இருக்கை அமைத்தல்
17. ஆதுலர்க்கு அன்ன சாலை அமைத்தல்
18. மகட்கொடை
19. தீராக்கடன் தீர்த்தல்
20. தூர்த்தர்க்கு உதவுதல்
21. படுக்கை அமைத்தல்
22. தண்ணீர் பந்தல் அமைத்தல்
23. சிறார்க்கு உணவளித்தல்
24. இரப்போர்க்கு ஈதல்
25. அன்ன சத்திரம் அமைத்தல்
26. தின்பண்டம் வழங்குதல்
27. உடுக்க உடை அளித்தல் 
28. முன்னோர் அறங்கள் காத்தல்
29. அறவைப் பிணம் அடக்கம் செய்தல்
30. விலைகொடுத்து உயிர் காத்தல்
31. ஆடை வெளுத்துக் கொடுத்தல்
32. மயிர்க் கழிப்பித்தல்

விளக்கவுரை ஒலிவடிவம்:


Comments