நவசித்தி அருள் சக்தி - பகுதி 5
நாறிதழி வேணி சிவ ரூப கலியாணி
209 - தோலெலும்பு
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்சபாணி
212 - விரகற நோக்கியும்
பகவதி பார்ப்பதி
213 - விந்துபேதித்த
எந்தை பாகத்துறையும் அந்த மாது
223 - நீலமுகில்
ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை
224 - ஆதிமுதல் நாளில்
கோமளி அநாதி
228 - புலவரை
சிலைநுதல் மைக்கண் சிந்தூர வாள் நுதல் இமய மகள்
229 - மனமெனும்
செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி எண்குண பூரணி காரணி
சிவை பரம்பரை ஆகிய பார்வதி
230 - அண்டர்பதி
அந்தரி
231 - சீதள வாரிஜ
மலைமாது பார்வதியாள்
238 - ஒருவழிபடாது
அரிவை
241 - ஏட்டின் விதிப்படியே
கூற்று மரித்திடவே உதை பார்வதியார்
242 - சுருதியாய்
உமை கனபாரக் களப பூண்முலை ஊறிய பால் உணு மதலை
245 - வங்கார மார்பிலணி
சிந்தூர பார்வதி
246 - பச்சை ஒண் கிரி
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம்
உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில்
பற்று புண்டரிகாமென ஏய் கயல் விழி ஞான
பத்தி வெண் தரளாமெனும் வாள் நகை
வித்ருமம் சிலை போல் நுதல் ஆரிதழ்
பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று
இச்சை அந்தரி பார்வதி மோகினி
தத்தை பொன் கவின் ஆலிலை போல் வயிறு
இல் பசுங்கிளியான மினூலிடை அபிராமி
எக் குலம் குடிலோடு உலகியாவையும்
இற்பதிந்து இரு நாழி நெலால் அறம்
எப்பொதும் பகிர்வாள்
விளக்கவுரை ஒலிவடிவம்:
%20(2).jpeg)
.jpg)
Comments
Post a Comment