நவசித்தி அருள் சக்தி - பகுதி 1

அனைவருக்கும் வணக்கம். திருப்புகழ் இசைவழிபாட்டில் நாம் பாடும் பாடல்களில் வரும் அம்பிகை பற்றிய குறிப்புகளைத் தொகுத்து, அவற்றின் பொருளை விளக்கும் ஒரு சிறிய முயற்சி இத்தொடர். சிறு சிறு பகுதிகளாக அனுபவிப்போம். பாடல் எண், அம்பிகை குறிப்பு வரும் பாடல் வரிகள் ஆகியவற்றின் எழுத்து வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கான பொருள், ஒலிப்பதிவாக வழங்கப்பட்டுள்ளது.



பாடல் எண் 1 - கைத்தல நிறைகனி

உத்தமி

4 - நினது திருவடி 

இரண பயிரவி

5 - முத்தைத்தரு

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்க நடிக்க

9 - சந்ததம்

சங்கரன் பங்கில் சிவை

11 - அந்தகன் வருந்தினம்

திருவான சங்கரி மனம் குழைந்துருக முத்தம் தர வரும் செழும் தளர்நடைச் சந்ததி 

12 - அமுதுததி

பங்கில் கொடியாட 

15 - அறிவழிய

பரமன் உமை இருவிழியும் மகிழ மடிமிசை வளரும் இளையோனே

19 - உததியறல்

அகில சக அண்ட நாயகி 

20 - ஏவினை

தேவி மநோமணி ஆயி பராபரை
     தேன்மொழியாள்

24 - கமலமாதுடன்

குமரி காளி பயங்கரி சங்கரி
     கவுரி நீலி பரம்பரை அம்பிகை
          குடிலை யோகினி சண்டினி

குண்டலி எமதாயி
குறைவிலாள் உமை மந்தரி அந்தரி
     வெகுவிதாகம சுந்தரி 

27 - கொம்பனையார்

பம்பரமே போல ஆடிய
     சங்கரி வேதாள நாயகி
          பங்கய சீபாத நூபுரி கரசூலி

பங்கமிலா நீலி மோடி 
     பயங்கரி மாகாளி யோகினி
          பண்டு சுராபான சூரனொடு எதிர்போர் கண்டு

எம் புதல்வா வாழி வாழி 
     எனும்படி வீறான வேல்தர
          என்றும் உளானே 

28 - சேமக்கோமள

ஓமத்தீ வழுவார்கட்கு ஊர் சிவ
     லோகத்தே தரு மங்கை

31 - தந்த பசிதனை

சிந்தை மகிழ மலைமங்கை நகிலிணைகள்
     சிந்து பயம் அயிலு மயில்வீரா
பாடல் பொருள் ஒலிப்பதிவு

Comments