கந்தர் அந்தாதி - செய்யுள் 67
சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திதிபுத்ரரா
சிகண்டிதத்
தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச்
சிகண்டிதத்
தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ்
சிகண்டிதத்
தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே
பதம் பிரித்த வடிவம்:
சிகண்டி
தத்தத் தமர வாரி விட்டு, அத் திதி புத்ர
(ரா)சி
கண்டித! தத்த நகபூதர! தெய்வவள்ளி
(கொடிச்)சி
கண்டு இதத்து அத்தமலர் மேல் குவித்து இடை செப்பு உரு
(வஞ்)சி
கண் திதத் தத்து அகல் தபோபலம் என்னும் சேகரனே
பொருள்:
சிகண்டி தத்தத் தமர வாரி விட்டு
சிகண்டி
– மயில் வாகனத்தை
தத்த
– தாவிச் செலுத்தும்படி (ஜதியுடன் பாயும்படி)
தமர
– ஆர்ப்பரிக்கும்
வாரி
– கடலின் கண்
விட்டு
– செலுத்தி
மயில் வாகனத்தை ஜதியுடன் பாயும்படி, ஆர்ப்பரிக்கும் கடலில் செலுத்தி
அத் திதி புத்ர ராசி கண்டித!
அ
– அவ் வீரம் வாய்ந்த
திதி
புத்ர ராசி – திதி தேவியின் பிள்ளைகளாகிய அசுரக் கூட்டங்களை
கண்டித
– கோபித்து அழித்தவனே!
வீரமிக்கவர்களும்
திதி தேவியின் பிள்ளைகளுமாகிய அசுரக் கூட்டங்களைக் கோபித்து அழித்தவனே!
தத்த நகபூதர! – நச்சுப் பல்லுடைய பாம்பு
போன்ற உருவுடைய செங்கோட்டு மலைக்கு அதிபனே!
தெய்வவள்ளி கொடிச்சி கண்டு
இதத்து அத்தமலர் மேல் குவித்து
தெய்வ
– தெய்விகமான
வள்ளிக்
கொடிச்சி – கொடி போன்ற குறப் பெண்ணாம் வள்ளி நாயகியை
கண்டு
– பார்த்து
இதத்து
– பணிவுடன்
அத்தமலர்
– மலர் போன்ற உன் கைகளை
மேல்
குவித்து – உன் தலைக்கு மேல் கூப்பிக்கொண்டு
தெய்விகத் தன்மை பெற்றவளும்
கொடி போன்றவளும் குறப்பெண்ணுமாகிய வள்ளியைப் பார்த்து, பணிவுடன், உன் மலர்க்கரங்களைத்
தலையின் மேல் கூப்பிக்கொண்டு…
இடை செப்பு உரு வஞ்சி கண் திதத் தத்து அகல் தபோபலம் என்னும் சேகரனே
இடை
– (ஏ பெண்ணே!) உனது இடை
செப்பு
– புகழ்ந்து கூறப்பெறும்
உரு
வஞ்சி – வஞ்சிக்கொடி போன்ற உருவுடையது
கண்
– உன் விழி
தித
– நிலைபெற்ற
தத்து
– ஆபத்துக்களையெல்லாம்
அகல்
– அகற்றி (எனது ஆசை அக்னியைத் தணிப்பதால்)
தபோபலம்
– அது நான் செய்த தவத்தின் பயனேயாகும்
என்னும்
சேகரனே – என்றெல்லாம் புகழ்ந்துரைத்த தலைவனே!
பெண்ணே! உன் இடை வஞ்சிக்கொடி
போன்றது; உன் கண் என் ஆபத்துகளை அகற்றும் எனது தவப்பயன் என்றெல்லாம் புகழ்ந்த தலைவனே!
பொழிப்புரை:
மயில்
வாகனத்தை வேகமாகச் செலுத்தி அசுரக் கூட்டங்களை அழித்தவனே! செங்கோட்டு வெற்பனே! வள்ளியைக்
கண்டு கைகளை சிரமேல் உயர்த்தி வணங்கி, அவள் இடை அழகையும் கண்ணழகையும் விரித்துரைத்த
கந்தப் பெருமாளே!
கந்தர் அந்தாதி செய்யுள் 67 விளக்கவுரை
.jpg)
Comments
Post a Comment