கந்தர் அந்தாதி - செய்யுள் 65
திகைப்படங்
கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய
திகைப்படங்
கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய
திகைப்படங்
கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி
திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ்சீகரமே
பதம் பிரித்த வடிவம்:
திகைப்பள்
தங்கப் புயம் தந்தருளான் என்பள் திங்கள்
(நிய)தி
கைப்பள் தம் கத்து அமையார் செந்திலார் என்பள் தென்னன்
(உய)தி
கைப்பு அடங்க புகல் சேய் என்பள் கன்னி கண்ணீர் தர
(வி)தி
கைப்படு அங்கத்து அமையாது எம் ஐ ஆட்கொளும் சீகரமே.
பொருள்:
திகைப்பள் – [என் கன்னிப்பெண்] மயங்கி நிற்கிறாள்
தங்கப் புயம் தந்தருளான் என்பள் – தழுவி உயர் நிலை பெறும்படி, [செந்திலோன்] தனது திருத்தோள்களை எனக்குக் கொடுத்தருள மாட்டான் என்கிறாள்.
திங்கள் நியதி கைப்பள்
திங்கள்
– சந்திரனை
நியதி
கைப்பள் – (தினமும்) வெறுத்துப் பேசுகிறாள்
சந்திரனை நித்தமும் வெறுத்துப் பேசுகிறாள்.
தம் கத்து அமையார் செந்திலார் என்பள் – தான் இப்படி வருந்தி அரற்றுவதைக் கண்டும் செந்திலான் தன்னை மன்னித்து ரக்ஷிக்க மாட்டேன் என்கிறான் என்று கூறுகிறாள்.
தென்னன் உயதி கைப்பு அடங்க புகல் சேய் என்பள்
தென்னன்
– கூன் பாண்டியன்
உயதி
– சுர வருத்தத்தின்
கைப்பு
அடங்க – வெப்பம் தணியும்படி
புகல் சேய் என்பள் – தேவாரப் பதிகத்தைப் பாடி அருளிய சேய் என்பாள்
கூன் பாண்டியனின் சுரத்தின் வெப்பம் தணியுமாறு பதிகம் பாடி அருளிய சேய் என்பாள்.
கன்னி கண்ணீர் தர – என் பெண், கண்ணீர் மல்க
விதி கைப்படு அங்கத்து அமையாது எம் ஐ ஆட்கொளும் சீகரமே
விதி
கைப்படு – பிரமனின் கையினால் சிருஷ்டிக்கப்படுகின்ற
அங்கத்து
– உடலுக்குள்
அமையாது
– இந்த ஆன்மா சேர்க்கப்பட்டு மீண்டும் பிறவி அடையாதபடி
ஆட்கொளும்
– ஆண்டு கொள்ள வேண்டும்
எம்
ஐ – என் சுவாமியே
சீகரமே
– அழகிய குமரக்கடவுளே!
(என்று
இறைஞ்சுகின்றாள்)
குமாரக்கடவுளே! என் சுவாமியே! பிரமனின் கையினால் மீண்டும் பிறவி அடையாதபடி என் பெண்ணை ஆட்கொண்டு அருள்வாயாக.
பொழிப்புரை:
அழகிய குமார சுவாமியே! என் உயிர்ப்பெண்ணானவள், செந்திலாண்டவன் என் குறைகளைத் தீர்ப்பானில்லை என்கிறாள்; கண்ணீருடன் சந்திரனையும் வெறுத்துப் பேசுகிறாள்; அவன் தனது திருத்தோள்களைத் தழுவத் தந்தானில்லை என்று ஏங்குகிறாள்; ஞானசம்பந்தனாகத் தோன்றி, கூன் பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்த அவன், என் விரக தாபத்தைத் தணிக்கின்றான் இல்லை என்கிறாள்; இனி இப்படிப்பட்ட பிறவியுற்று வருந்தாவகை அவளை ஆட்கொள்வாயாக.
.jpg)
Comments
Post a Comment