கந்தர் அந்தாதி - செய்யுள் 61
திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந்
திக்கர
சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ
திக்கர
சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத்
திக்கர
சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே
பதம் பிரித்த வடிவம்:
திக்கர்
அச திதவன் சென்று முன் “திதிகுமரர்
(வந்)திக்கு
அர! சத்தி இடத்தோய்! என் செய்வது?" என
தரு
(நீ)தி
கரசத்தி விதிர்த்திலையேல் எவன் செய்குவர்?
(அத்)திக்கு
அரசு! அத்தி அலைவாய் வளர் நித்திலக் கொழுந்தே!
பொருள்:
அத்திக்கு அரசு! அத்தி அலைவாய்
வளர் நித்திலக் கொழுந்தே!
அத்திக்கு அரசு – தெய்வயானையின் மணாளனே!
அத்தி
– சமுத்திரத்தின் கண் (அமைந்துள்ள)
அலைவாய்
வளர் – செந்தூரில் விளங்கும்
நித்திலக் கொழுந்தே – முத்தின் கொழுந்தொளி போன்றவனே
தெய்வயானை நாயகனே! திருச்செந்தூரில்
விளங்கும் முத்தொளி போன்றவனே!
திக்கர் அச திதவன் சென்று முன் “திதிகுமரர் வந்திக்கு அர! சத்தி இடத்தோய்! என் செய்வது?" என
முன்
– முன்னொரு காலத்தில்
திக்கர்
– அஷ்ட திக் பாலகர்களும்
அச திதவன் – ஆட்டை நிலையான வாகனமாகக் கொண்ட அக்னியும்
சென்று – சிவபெருமானிடத்தில் சென்று
அர
– அரனே!
சத்தி
இடத்தோய் – உமா தேவியை இடப் பாகத்தில் வைத்திருப்பவனே!
திதிகுமரர்
– திதியின் பிள்ளைகளான சூரபத்மாதியர்களால்
வந்திக்கு
– எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை
என்
செய்வது? – எப்படித் தாங்கிப் பிழைப்போம்?
என – என்று முறையிடுகையில்
அஷ்ட திக் பாலகர்களும், அக்னியும்
சிவபெருமானிடத்தில், முன்னொரு காலத்தில் சென்று, “அரனே! பார்வதியை இடப்பாகத்தில் கொண்டவனே!
அசுரர்களால் இழைக்கப்படும் கொடுமைகளை நாங்கள் எப்படித் தாங்கிக்கொள்வது?” என்று முறையிடுகையில்..
தரு நீதி கரசத்தி விதிர்த்திலையேல் எவன் செய்குவர்?
தரு – அவர் உனக்களித்த
நீதி
– அடியவர் துயரை நீக்குவதையே குறியாகக் கொண்ட
கர சத்தி – கர வேலாயுதத்தை
விதிர்த்திலையேல் – (சூரபத்மாதியர் மேல்) செலுத்தி அவர்களை அழித்திராவிடில்
எவன் செய்குவர்? – அத் தேவர்கள் எப்படிப் பிழைத்திருப்பார்கள்?
அவர் உனக்களித்த வேலாயுதத்தை,
நீ சூரபத்மாதியர் மேல் செலுத்தி அவர்களை அழித்திராவிடில். தேவர்கள் எப்படிப் பிழைத்திருப்பார்கள்?
“ஆராயு நீதி வேல்” (சீரான கோலகால – திருப்புகழ்)
விதிர்த்தல் – அசைத்தல் (மலர்க்கமல கரத்தின் முனை விதிர்க்க
– வேல் வகுப்பு)
பொழிப்புரை:
தெய்வயானை மணாளனே! செந்திலில் வாழும் முத்தொளி போன்றவனே! தேவர்கள் முறையீட்டிற்கிரங்கி, பரமசிவன் உனக்குக் கொடுத்த வேற்படையைச் செலுத்தி அசுரர்கள் அனைவரையும் நீ அழித்திராவிடில், தேவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்?
.jpg)
Comments
Post a Comment