கந்தர் அந்தாதி - செய்யுள் 58
சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி
சீலங்
கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு
சீலங்
கனமுற்ற வேதனை மேவித் தியங்கினஞ்சீ
சீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே
பதம் பிரித்த வடிவம்:
சீலம்
கனம் முற்று அபங்கா கரசலதீ ரக்க
(நி)சீ
லங்கன முற்றம் முத்து ஊர் செந்தூர சிகண்டி
(அம்
சு)சீ லங்கனம் உற்ற வேதனை மேவி தியங்கினம்
(சீ)
சீ லங்கனம் முற்ற இப்பிறப்பூடு இனிச் சேர்ப்பது அன்றே.
பொருள்:
சீலம் கனம் முற்று அபங்கா
சீலம்
– கொடைக்குணத்திலும்
கனம்
– பெருமையிலும்
முற்று
– மேம்பட்ட
அபங்க
– குற்றமற்றவனே!
கொடையிலும் பெருமையிலும் மேம்பட்ட, குற்றமற்றவனே!
கர சலதீ ரக்க நிசீ லங்கன
கர
– கோபமுடைய
சலதீ
– சமுத்திரத்தின்கண்
ரக்க
– அசுரக் கூட்டமாகிய
நிசீ
– இருளை
லங்கன – அழித்தவனே!
கோபமுடைய சமுத்திரத்திடத்தில்
அசுரக் கூட்டமாகிய இருளை அழித்தவனே!
முற்றம் முத்து ஊர் செந்தூர
முற்றம்
– முற்றம் போன்ற கடற்கரையின் கண்
முத்து
ஊர் – முத்துக்கள் இறைந்து கிடக்கின்ற
செந்தூர – செந்திற்பதியோனே!
கடற்கரையில் முத்துக்கள் இறைந்து கிடக்கும் செந்திலாண்டவனே!
[ஒரு
கோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் – கந்தர் அலங்காரம்]
சிகண்டி அம் சுசீ
சிகண்டி
– மயில் வாகனமுடைய
அம்
– அழகிய
சுசீ – பரிசுத்தமானவனே!
மயில் வாகனமுடைய அழகிய பரிசுத்த
மூர்த்தியே!
லங்கனம் உற்ற வேதனை மேவி தியங்கினம்
லங்கனம்
– பசியாகிய உதராக்னியினால்
உற்ற
– ஏற்படும்
வேதனை
மேவி – வருத்தத்தை அடைந்து
தியங்கினம் – மயங்குகின்றேன்.
பசியால் வருத்தம் அடைந்து
மயங்குகின்றேன்.
சீ சீ
சீசீ – இது மிகவும் இகழ்ச்சிக்கிடமானது.
லங்கனம் முற்ற இப்பிறப்பூடு இனிச் சேர்ப்பது அன்றே
லங்கனம்
முற்ற – முற்ற லங்கனம் – முற்றிலும் குற்றத்திற்குரிய
இப்பிறப்பூடு – இப்படிப்பட்ட பிறவியில்
இனிச் சேர்ப்பது அன்றே – இனிமேலும் என்னைக் கொண்டுபோய்த் தள்ளுவது நன்றன்று.
குற்றமுடைய இப்பிறப்பில் இனியும்
என்னைச் சேர்ப்பது நன்றல்ல.
பொழிப்புரை:
குறைவில்லாதவனே! கடலின் கண் அசுரக் கூட்டத்தை மாய்த்தவனே! செந்திலாண்டவனே! மயில் வாகனனே! உதராக்னியைச் சமன்படுத்தும் பொருட்டு, வயிற்றுப் பிழைப்பிற்காக அற்றைக்கிரை தேடும் இகழ்ச்சியான இந்த ஜனனத்தை நான் மீண்டும் அடையாதபடி என்னைக் காப்பாற்றுவாயாக.
.jpg)
Comments
Post a Comment