கந்தர் அந்தாதி - செய்யுள் 55
தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந்
தீதோ
மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந்
தீதோ
மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத்
தீதோ
மரண மலையாளி யென்றுரை தென்னுறவே
பதம் பிரித்த வடிவம்:
தீதோ மரணம் தவிரும்; பிறப்பு அறும்; தீய கல்
(புந்)தீ
தோம் அரண் அம்பர மீது தானவர் சேனை முற்றும்
தீ
தோமர ணந்தன பூசுரர் திரண்டு ஏத்திய
(முத்)து
ஈது ஓமரண மலையாளி என்று உரை தென்னுறவே
பொருள்:
தீதோ மரணம் தவிரும்; பிறப்பு அறும்; தீய கல் புந்தீ
தீய கல் புந்தீ – கொடியனவற்றையே கற்கின்ற மனமே!
தீதோ – தீமை மாத்திரமோ?
மரணம்
தவிரும் – இறப்பு ஒழிந்துபோகும்
பிறப்பு
அறும் – பிறவியும் நீங்கும்
(ஆதலால்)
தென்னுறவே
– உன் சித்தம் அழகுறவே,
தீமை மட்டுமல்லாமல், இறப்பும்
பிறப்பும் நீங்கும். ஆதலால் உன் சித்தம் அழகுற, (பின் வருமாறு முருகனைத் துதிப்பாய்)
தோம் அரண் அம்பர மீது தானவர்
சேனை முற்றும் தீ தோமர
தோம் – குற்றத்திற்கு
அரண்
– இடமாகிய
அம்பர
மீது – கடலின் கண்
தானவர்
சேனை முற்றும் – அசுர சேனை அனைத்தையும்
தீ
தோமர – தகித்த கை வேலை உடையவனே!
குற்றத்திற்கு
இடமாகிய கடலில், அசுர சேனையை முற்றிலுமாக அழித்த வேலை உடையவனே!
ணந்தன – கருணா மூர்த்தியே!
பூசுரர் திரண்டு ஏத்திய முத்து – வேள்வி முடியும் காலத்தில், வேதியர் அனைவரும் திரண்டு கொண்டு ஒரே மாதிரியாக உச்சக்குரலில் “சுப்ரமண்யோம்” என்று மூன்று முறை முழங்கி வணங்குகின்ற முத்துக்குமரனே!
ஈது ஓமரண – இந்த வேள்வியில் கொடுக்கப்படும் அவிர்
பாகத்திற்கு உரிமை உரிமை உடையவனே! (அந்தண் மறை
வேள்வி காவற்கார – முந்து தமிழ்மாலை – திருச்செந்தூர்த்
திருப்புகழ்)
மலையாளி – மலைகளை ஆளும் உரிமையுடைய குறிஞ்சிக் கடவுளே!
என்று உரை தென்னுறவே
என்றுரை – என்று துதிப்பாயாக!
தென்னுறவே
– உன் சித்தம் அழகு பெறவே.
பொழிப்புரை:
தீமையையே நாடும் புத்தியே! உன் சித்தம் அழகு பெற, கடலின் கண் அசுரர் சேனையை அழித்த வேலாயுதனே! யாக ரக்ஷக மூர்த்தியே! சரவண முத்தையனே! குறிஞ்சித் தெய்வமே! என்றெல்லாம் நீ துதித்தாயானால் உனது தீமை மாத்திரமா நீங்கும்? பிறப்பும் இறப்பும் நீங்கி, இறவாப் பிறவாப் பெருவாழ்வு வாய்க்கும்.
.jpg)
Comments
Post a Comment