கந்தர் அந்தாதி - செய்யுள் 39
தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன்
தீவர
கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந்
தீவர
கந்தரி சிந்துரை பாக சிவகரண
தீவர
கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே
பதம் பிரித்த வடிவம்:
தீ வரகு அந்து அரி தாம் பகிரார் உறவான செம்பொன்
தீவர்;
அகம் தரியா நொந்த போதினில் செச்சைய!
(இந்)தீவர!
கந்தரி சிந்துரை பாக! சிவகரண
தீ
வர கந்த! ரிபு தீர் உனது அடி சேம நட்பே
பொருள்:
இப்பாடலில், முருகனின் திருவடியே நமக்கு உறவு என்று பாடுகிறார்.
தீ வரகு அந்து அரி தாம் பகிரார்
உறவான செம்பொன் தீவர் அகம் தரியா நொந்த போதினில்
தீ – தீய்ந்து போன
வரகு
– கேழ்வரகு எனும் தானியத்தில்
அந்து
– வண்டுகளால்
அரி
– அரிக்கப்பட்ட [பதரையும் கூட]
தாம்
பகிரார் – தாம் பங்கிட்டுக் கொடுக்கமாட்டார்
உறவான
– எனக்கு உறவென்பவர்கள்
செம்பொன்
தீவர் – சிவந்த பொன் விளையும் தீவில் இருப்பவரேயாயினும்
அகம் – பாவத்தை
தரியா
– தரித்து
நொந்த
– மனம் பொறுக்கக்கூடாமல் வருந்தும்
போதினில்
– காலத்தில்
பாவத்தைத் தரித்து மனம் தாங்காமல்
வருந்தும் காலத்தில் கூட, என்னுடைய உறவுக்காரர்கள், பொன் விளையும் தீவில் இருப்பவர்களாயினும்,
தீய்ந்து போன கேழ்வரகில் வண்டுகள் அரித்த பதரைக்கூடப் பங்கிட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
“வறிஞர்க்கு என்றும் நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்” – கந்தர் அலங்காரம்
செச்சைய! இந்தீவர! கந்தரி
சிந்துரை பாக! சிவகரண தீ வர கந்த!
செச்சைய – வெட்சிமாலை அணிந்தவனே
இந்தீவர
– செங்கழுநீர் மாலையை உடையவனே
கந்தரி
– மலைக்குகையிலிருந்த வள்ளி நாயகியையும்
சிந்துரை
– ஐராவதத்திடம் வளர்ந்த தெய்வயானையையும்
பாக
– இரு புறங்களிலும் உடையவனே
சிவகரண
– சிவகரணம் புரிகின்ற
தீ
வர கந்த – புத்தியை வரமாகக் கொடுக்கின்ற கந்தக் கடவுளே!
வெட்சிமாலை அணிந்தவனே! செங்கழுநீர்
மாலை அணிந்தவனே! வள்ளியையும் தெய்வயானையையும் இருபுறங்களில் உடையவனே! சிவகரணம் புரிகின்ற
புத்தியை அளிக்கும் கந்தனே!
“பகர்தரு குறமகள் தருவமை வனிதையும் இருபுடையுற வரு பெருமாளே” – அரஹரசிவன் அரி – திருத்தணித் திருப்புகழ்
ரிபு தீர் உனது அடி சேம நட்பே
ரிபு – சத்ருக்களை
தீர்
– சம்ஹாரம் செய்யத்தக்க
உனது
அடி – உனது திருவடியே
சேம
நட்பே – பொக்கிஷமும் உயிர்த்துணையுமாம்
எதிரிகளை அழிக்கவல்ல உனது
திருவடியே பொக்கிஷமும் துணையுமாகும்.
“பற்றற்றார் பற்றும் பவள அடி, மணி அடி, பொன்னடி, மாண்பாம் அடி, மருந்தாய்ப் பிணிதீர்க்கவல்ல அடி” – அப்பர்
பொழிப்புரை:
என்னுடைய உறவு என்பவர்கள், பொன் விளையும் தீவில் இருந்தாலும், நான் வருந்தும் காலத்தில் கூட, தீய்ந்து போய், வண்டு அரித்துப் பதரான கேழ்வரகாகிலும் அதனைப் பங்கிட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஆகையால், வெட்சி, செங்கழுநீர் மாலை அணிந்தவனே! வள்ளி தெய்வயானையை இரு புறத்திலும் உடையவனே! சிவகரணம் புரியும் புத்தியை அளிக்கும் கந்தப் பெருமானே! எதிரிகளை அழிக்கவல்ல் உனது திருவடியே நமக்கு என்றும் உறவாகும்.
.jpg)
Comments
Post a Comment